மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து திமுக எம்.பி.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார் .
சேலம்,
சேலத்த்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ;
எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் 38 திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள்? இது குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை.கடந்த அதிமுக எம்பிகள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். தற்போது திமுக எம்பிகள் வாய் மூடி மௌனம் சாதிப்பதற்கு காரணம் என்ன?.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.கோவை செல்வராஜ்,ஜேடிசி பிரபாகரன் ஆகியோர் யார்? அதிமுகவிற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story