செந்தில் பாலாஜியை அனைவரும் சந்திப்பது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி


செந்தில் பாலாஜியை அனைவரும் சந்திப்பது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 30 Jun 2023 5:43 PM IST (Updated: 30 Jun 2023 6:04 PM IST)
t-max-icont-min-icon

ஊழல் பற்றி கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் செந்தில் பாலாஜியை சென்று பார்க்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

ஊழல் பற்றி கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் தான் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் செந்தில் பாலாஜியை சென்று பார்க்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

துரை முருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஒரு சிலரே சென்று பார்த்தனர். ஆனால் ஊழல் பற்றி கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் செந்தில் பாலாஜியை சென்று பார்க்கின்றனர்.

2 ஆண்டு திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story