"விஜயகாந்த் மேல ஏன் இவ்ளோ வன்மம்"..ஆவேசமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்


விஜயகாந்த்  மேல ஏன் இவ்ளோ வன்மம்..ஆவேசமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 8 Dec 2023 9:31 AM IST (Updated: 8 Dec 2023 10:39 AM IST)
t-max-icont-min-icon

"நன்றாக இருக்கும் விஜயகாந்த் குறித்து கேவலமான தகவல்களைப் பரப்புகிறார்கள்.. அப்படி என்னதான் வன்மம் எனப் புரியவில்லை என்று, பிரேமலதா கூறினார்.

சென்னை

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை. நான் மட்டுமே அவருடன் இருந்து வருகிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்துத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும், சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

தவறாக ஒரு தகவலைப் பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். அப்படி கேட்டால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சொல்லப் போகிறோம். அதைவிட்டுவிட்டு பலரும் வதந்தி பரப்பி வருகிறார்கள். நான் மனசு வருத்தப்பட்டுக் கேட்கிறேன். விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்கு புரியவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார்" என்றார்.


Next Story