பரவலாக மழை


பரவலாக மழை
x
தினத்தந்தி 2 July 2023 9:00 PM GMT (Updated: 3 July 2023 11:00 AM GMT)

பூதலூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் செங்கிப்பட்டியில் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் நிற்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. .செங்கிப்பட்டியில் தஞ்சை மற்றும் திருச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை.

இதனால் வெயிலிலும், மழையிலும் மக்கள் திறந்த வெளியில் நின்று பஸ்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. கடந்த 20-ந் தேதி செங்கிப்பட்டி மேம்பால பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தற்போது வரை முழுமையாக சீரமைப்பு பணிகள் செய்யாத நிலையில் பலத்த மழை காரணமாக மேலும் சேதம் ஏற்படுமோ? என வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story