அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை


அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை
x

அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பரவலாக மழை

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிேய வர சிரமப்பட்டனர். வழக்கம்போல் நேற்றும் காலை முதல் கடும் வெயில் அடித்தது.

இந்நிலையில் திடீரென மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சற்று நேரத்தில் சாரல்மழை பெய்தது. நேரம் ஆக ஆக பலத்த மழையாக நீடித்தது. பாலையம்பட்டி, ராமானுஜபுரம், கோபாலபுரம், கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. பாளையம்பட்டியில் மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மாலையில் பெய்த மழை காரணமாக அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story