கரூரில் பரவலாக மழை


கரூரில் பரவலாக மழை
x

கரூரில் பரவலாக மழை பெய்தது.

கரூர்

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. அவ்வப்போது வெயில் அடித்தது.

இந்நிலையில் கரூரில் நேற்று மாலை 4.40 மணியளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story