கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
கரூர்
கரூரில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை 5.15 மணியளவில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இதேபோல் குளித்தலை மற்றும் அதனை கிராமப் பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள், தெருக்களில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை அளவில் 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story