கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது.
பரவலாக மழை
கரூரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 2.45 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதியடைந்தனர். சிலர் குடைப்பிடித்து சென்றதையும் காண முடிந்தது. இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நொய்யல்
நன்செய் புகழூர், தவிட்டுப்பாளையம், நத்தமேடு ,திருக்காடுதுறை, கோம்புப்பாளையம், பாலத்துறை, கந்தம்பாளையம்,பேச்சிப்பாறை, நடையனூர், முத்தனூர், மரவாபாளையம், உப்புப்பாளையம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்துள்ளனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்றவர்களும், நடந்து சென்ற கூலி தொழிலாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலையில் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இரவுவரை பெய்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
குளித்தலை
குளித்தலை நகர மற்றும் கிராம பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பணி பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலுக்கு பின்னர் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையானது தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், காகிதபுரம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் பலர் குடைப்பிடித்து கொண்டு சென்றதை காண முடிந்தது. மேலும் மழையால் சாலையோரங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலமாக மழை பெய்த