கூத்தாநல்லூர், மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை
கூத்தாநல்லூர், மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை
கூத்தாநல்லூர், மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், கோரையாறு, வடகோவனூர், தென்கோவனூர், வெள்ளக்குடி, விழல்கோட்டகம், திருராமேஸ்வரம், குலமாணிக்கம், வடபாதிமங்கலம், நாகங்குடி, பழையனூர், வேளுக்குடி, சித்தனங்குடி, பாரதிமூலங்குடி, பூந்தாழங்குடி, ராமநாதபுரம், ஓவர்ச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
மன்னார்குடி
இதேபோல் நேற்று மன்னார்குடி மற்றும் பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, சுந்தரகோட்டை, பைங்காநாடு, சேரன் குளம், பாமணி, மூவாநல்லூர், மேலவாசல், காரிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆங்காங்கே நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.