கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை


கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை
x

கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை

திருவாரூர்

மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், கோரையாறு, வடகோவனூர், தென்கோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் சேதமடைந்த ஈரப்பதம் கொண்ட நெல்களை தொடர்ந்து காய வைப்பதில் அந்த பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.


Related Tags :
Next Story