குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:46 PM GMT)

குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 15.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 15.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவசாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை காணப்பட்டது. நாகர்கோவில் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானில் கார்மேகங்கள் சூழ்ந்து இருந்தன. பின்னர் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடைகள் பிடித்தபடி சென்றாா்கள்.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 15.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 7.4, களியல்- 14.5, கன்னிமார்- 1.8, கொட்டாரம்- 1.2, மயிலாடி- 2.6, குழித்துறை- 6.2, நாகர்கோவில்- 4.2, பேச்சிப்பாறை- 2.4, புத்தன் அணை- 12.8, சிற்றார் 2- 4, சுருளோடு- 9, இரணியல்- 1.2, பாலமோர்- 12.2, மாம்பழத்துறையாறு- 3, திற்பரப்பு- 12.8, ஆரல்வாய்மொழி- 4.2, கோழிப்போர்விளை- 8.2, அடையாமடை- 2.1, முக்கடல் அணை- 8.2 என பதிவாகி இருந்தது.

அதேசமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 366 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 689 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 193 கனஅடிநீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story