குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

பரவலாக மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது.

காலையில் வழக்கம் போல வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.

மாணவ-மாணவிகள்

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கையில் குடை பிடித்தபடி சென்றனர். மேலும் பலர் மழையில் நனைந்தபடியே சென்றதையும் பார்க்க முடிந்தது.

அதே சமயம் ஈத்தாமொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், குமரி மேற்கு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


Next Story