குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:45 PM GMT)

குமரியில் பரவலாக மழை சுருளோட்டில் 55.2 மில்லி மீட்டர் பதிவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று முன்தினமும் பல இடங்களில் மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் பகுதியில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுருளோட்டில் 55.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதே போல பெருஞ்சாணி- 40.8, பேச்சிப்பாறை- 1.2, புத்தன்அணை- 2, தக்கலை- 2.2, பாலமோர்- 3.4, அடையாமடை- 7.2 என்ற அளவில் மழை பெய்துள்ளது. மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 235 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


Next Story