மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை


மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:47 PM GMT)

மன்னார்குடி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், இந்த மழை சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வரும் நாட்களில் மேலும் மழை பெய்தால் பயிர்களை முழுமையாக காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story