நாகை மாவட்டத்தில் பரவலாக மழை


நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாகை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது.தற்போது மழை நின்று கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் இரவில் கடும் பனி பொழிவு நிலவி வந்தது.இந்த நிலையில் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி, திருமருகல், அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், குருவாடி, அண்ணா மண்டபம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதேபோல் நாகை, நாகூர், வேதாரண்யம், சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Related Tags :
Next Story