எஸ்.புதூரில் பரவலாக மழை


எஸ்.புதூரில் பரவலாக மழை
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூரில் பரவலாக மழை பெய்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிக அளவில் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தொடங்கிய கத்தரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். ஆனால் வழக்கத்தைவிட நேற்று கத்தரி வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர், தர்மபட்டி, கிழவயல், கரிசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியது.


Next Story