மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை வரை ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில் 32.2 மி.மீ. மழை பதிவானது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தர்மபுரி- 2, பென்னாகரம்- 29, அரூர்- 5, மொரப்பூர்- 4, நல்லம்பள்ளி- 13, ஒகேனக்கல்-16.8, மாரண்டஅள்ளி-5,பாலக்கோடு- 2.4 மாவட்டம் முழுவதும் சராசரியாக 10.71 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story