திருமருகல் பகுதியில் பரவலாக மழை


திருமருகல் பகுதியில் பரவலாக மழை
x

திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. நேற்று மதியம் திட்டச்சேரி, திருமருகல், குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மருங்கூர், கட்டுமாவடி, உத்தமசோழபுரம், புத்தகரம், ஏனங்குடி, திருப்புகலூர், கங்களாஞ்சேரி, இடையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் குறுவை, சம்பா சாகுபடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், மஞ்சள் பூச்சி தாக்குதல்களில் இருந்து நெற்பயிர்களை பாதுகாத்துக்கொள்ளவும் இந்த மழை பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story