சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை


சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Aug 2022 2:20 PM IST (Updated: 26 Aug 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல்,கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை பெரம்பூர், மீனம்பாக்கம்,சௌகாரபேட்டை, கொரட்டூர், அம்பத்துர், அனகாபுத்துர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Related Tags :
Next Story