ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேல்ராஜ், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதியோர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி தொடக்க உரையாற்றினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் மாரி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து, மருந்தாளுனர் சங்க மாநில நிர்வாகி மோகன்ராஜ், பட்டுப்பூச்சி அலுவலர் சங்க மாநில தலைவர் வெங்கடேசன், சாலை பணியாளர் சங்கச் செயலாளர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மனித சங்கிலி போராட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு தொடங்கி எல்.ஐ.சி. அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சங்க செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.



Next Story