கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பரவலாக மழை


கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பரவலாக மழை
x

கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பரவலாக மழை

‌வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து நாகை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் மழை பெய்து.

இந்த நிலையில் நேற்று காலை நாகை அருகே கீழ்வேளூர், தேவூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம், இலுப்பூர், கூத்தூர், ‌‌ ஆழியூர், திருக்கண்ணங்குடி, சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம் அகரகடம்பனூர், புலியூர், ராமர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத நிலையில் நேற்று பெய்த மழை ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story