சுத்தியலால் அடித்து மனைவி கொலை
சிவகங்கையில் குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அடித்துக்்கொலை
சிவகங்கை நகர் சூரக்குளம் ரோடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி(வயது 43). இவரது மனைவி கற்பகம்(40). இவர்களுக்கு ரவீந்திரன்(21), நவீன் (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். மார்க் ஆண்டனி கர்நாடகாவில் கரிமூட்டம் போடும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.
சம்பவத்தன்று காலையில் தொழிலாளி மார்க் ஆண்டனிக்கும், அவரது மனைவி கற்பகத்துக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்க் ஆண்டனி, மனைவியை சுத்தியலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்க் ஆண்டனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.