குட்டையில் குதித்து மனைவி தற்கொலை


குட்டையில் குதித்து மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2023 11:59 PM IST (Updated: 28 Jun 2023 2:41 PM IST)
t-max-icont-min-icon

கணவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்தால் மனமுடைந்து குட்டையில் குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதயத்தில் அடைப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் சுப்பிரமணியின் மனைவி நிர்மலா தேவி (44) கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணபட்டுள்ளார்.

இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த பெருமூச்சியில் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அங்குள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் நிர்மலா தேவியின் உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிர்மலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story