இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

குடியாத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய நகர செயலாளர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கே.சி.பிரேம்குமார், கே.கல்பனா சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம.எல்.ஏ.வுமான ஜி.லதா மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து மறியலில் ஈடுபட்டார்.

இதில் விலைவாசி உயர்வை கண்டித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. லதா மற்றும் பெண்கள் உள்பட சுமார் 75 பேரை குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story