கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி சிறையில் அடைப்பு


கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி சிறையில் அடைப்பு
x

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மதனகோபாலபுரம், பாரதிதாசன் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). சினிமா தியேட்டர் ஆபரேட்டரான இவரை கடந்த 25-ந் தேதி நடந்த குடும்ப தகராறில் அவரது மனைவி மலர்க்கொடியும் (40), மகன் வெங்கேடசனும் (24) சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதில், அவர் உயிாிழந்தார். மேலும் ராமகிருஷ்ணன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த வெங்கடேசன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்க்கொடியை நேற்று கைது செய்தனர். பின்னர் மலர்க்கொடியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story