கொட்டாம்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை


கொட்டாம்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை
x

கொழுந்தியாளை 2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ெதாழிலாளி கைது செய்யப்பட்டார்.

மதுரை

கொட்டாம்பட்டி

கொழுந்தியாளை 2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ெதாழிலாளி கைது செய்யப்பட்டார்.

அடிக்கடி தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நல்லையன் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கலைச்செல்வி(45). இவர்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கலைச்செல்வியின் சகோதரி ஒருவர், 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். அந்த பெண்ணை தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என நல்லையன் மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மனைவி கலைச்்செல்வி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் கலைச்செல்வியுடன் நல்லையன் தகராறு செய்துள்ளார்.

கல்லைப்போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீ்ண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த நல்லையன் அருகே இருந்த பெரிய கல்லை தூக்கி கலைச்செல்வியின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கலைச்செல்வி உயிருக்கு போராடினார். அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story