மகன், மகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி


மகன், மகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
x

வேப்பூர் வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை பெற்ற மகன், மகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கழுத்தை நெரித்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

கடலூர்

வேப்பூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 33). இவருக்கு தீபா(30) என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆறுமுகம் கடந்த 12 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து விட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை ஆறுமுகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து கொன்றனர்

அப்போது தீபாவிடம் போலீசார் விசாரித்தனர். அதில், அதிர்ச்சியான தகவல் வெளியானது. அதாவது, மகள் வேறு நபருடன் பழகியதை அறிந்த ஆறுமுகம் தனது மகளை கண்டித்ததோடு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை திட்டி தாக்கியதாக தெரிகிறது.

இதைபார்த்து ஆத்திரமடைந்த தீபா தனது மகன், மகளுடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து தீபா மற்றும் அவருடைய மகன், மகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story