மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி
ராமநாதபுரத்தில் மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு ஆணும் தங்களின் தோளோடு தோள் நின்று இன்ப துன்பங்களில் பங்கெடுத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கி வழிநடத்தி செல்லும் வாழ்க்கை துணையை நன்றியுடன் வாழ்த்துவதற்காக 'மனைவி நல வேட்பு நாள்' என்ற கொண்டாட்டத்தை வேதாத்திரி மகரிஷி அறிமுகப்படுத்தினார். அவரது மனைவி லோகாம்பாள் 106-வது பிறந்தநாளையொட்டி நேற்று ராமநாதபுரம் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் மனைவி நல வேட்பு நாள் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அருகே உள்ள எட்டிவயல் தரணி இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தம்பதியருக்கான காந்தப்பரிமாற்ற பயிற்சியை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மனவளக்கலை ஆசிரியர் தரணி முருகேசன் அளித்தார். புதுமணத் தம்பதியர் முதல் வயது முதிர்ந்த தம்பதியர் வரை ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.எதிர் எதிரே அமர்ந்த கணவனும், மனைவியும் அமைதியாக ஒருவர் கண்களை ஒருவர் ஆழ்ந்து உற்று நோக்கி பயிற்சியில் ஈடுபட்டனர். பின் ஆண்கள் எழுந்து மனைவியருக்கு மரியாதை செய்தனர்.