தெருநாய்கள் கடித்து புள்ளிமான் படுகாயம்


தெருநாய்கள் கடித்து புள்ளிமான் படுகாயம்
x

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் படுகாயம்

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியேறியது. பின்னர் புள்ளிமான் அருகே உள்ள கரளவாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கு வந்த தெருநாய்கள் புள்ளிமானை துரத்தி சென்று கடித்து குதறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தெருநாய்களை விரட்டிவிட்டு புள்ளிமானை மீட்டனர். அதன்பின்னர் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த வன ஊழியர்கள் புள்ளிமானுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து புள்ளிமானை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story