வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை சாவு


வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை சாவு
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டுக்கழுதை அறுவை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

செங்கல்பட்டு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 வயதுடைய பெண் ஆசிய காட்டுக்கழுதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தது. நேற்று முன்தினம் காட்டுக்கழுதை பிரசவத்துக்காக முயற்சி செய்து மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த ஊழியர்கள், பூங்கா அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டாக்டர்கள் பிரசவ வலியால் அவதிப்பட்ட காட்டுக் கழுதைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் காட்டுக்கழுதைக்கு இயற்கையான முறையில் பிரசவிக்க முடியாமல் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தது. எனவே பூங்கா டாக்டர்கள் காட்டுக்கழுதைக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து குட்டியை எடுக்க முயன்றனர். காட்டுக்கழுதை வயிற்றில் இருந்த ஆண் குட்டி இறந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை பலனின்றி பிரசவ வலியால் அவதிப்பட்ட தாய் காட்டுக் கழுதை பரிதாபமாக உயிரிழந்தது.


Next Story