கதண்டுகள் தீ வைத்து அழிப்பு
மடப்புரம் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.
Related Tags :
Next Story