காட்டுப்பன்றிகள்
சேத்தூர் ஊராட்சியில் சம்பா சாகுபடி வயலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
மயிலாடுதுறை
மணல்மேடு அருகே 26-சேத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சேத்தூர், உடையூர், பருத்திக்குடி, மண்ணிப்பள்ளம், மானாந்திருவாசல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 400 ஏக்கரில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது விதைவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உழுது விதை விட்ட நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து சாகுபடி வயலை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே சம்பா சாகுபடி வயலை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகளை உடனே பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை நெல் விட்டு பாதிக்கப்பட்ட வயல்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story