ஆனைமலை அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


ஆனைமலை அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்பட்ட 17 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அதில் சர்க்கார்பதி, தம்பம்பதி, சரளபதி உள்ளிட்ட பகுதிகள் அடர் வனப்பகுதியில் உள்ளன. வனத்தில் காட்டெருமை, கடமான், மான், காட்டு பன்றிகள், யானைகள் உள்ளிட்ட எண்ணற்ற வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதி அருகில் உள்ள விளை நிலங்களில் பந்தல் சாகுபடி, தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களை சாகுபடி செய்வது வழக்கம். இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி மரவள்ளிக்கிழங்கு, சோளம், நிலக்கடலை உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளைப்பொருட்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்வதற்கு முன் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து விலை பொருட்களை உண்டு சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் கவலை அடைந்து உள்ளார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தற்போது மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வனப்பகுதி அருகிலுள்ள விலை நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்துகிறது. இதனால் 3 மாதம் விளைவித்த விளை பொருட்கள் வீணாவதோடு விவசாயிகளின் உழைப்பும், பணமும் வீணாகிறது. கிராமப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் போகாமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story