கிணத்துக்கடவு பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்-உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கிணத்துக்கடவு பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்-உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி, கோடங்கிபாளையம், கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களை பயிர் செய்துள்ளனர். இதில் தற்போது பல விவசாய நிலங்களுக்குள் நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் பல்வேறு கிராமப் பகுதிக்குள் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து விளைபொருட்களை சேதப்படுத்தியும் அங்குள்ள வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர் வகை செடிகளை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் உள்ள விவசாய பயிர்களை காத்துக் கொள்ள விவசாய பயிர்களை சுற்றி சேலைகள் மற்றும் கம்புகளை நட்டு இரும்பு கம்பிகளை கட்டி வைத்துள்ளனர். ஆனாலும் கோதவாடி, கொண்டம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தோட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைகன்றுகளையும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள். அதனால் வனத்துறையினா் காட்டுப்பன்றிகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டுவதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.