குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டுப்பன்றிகள்


குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டுப்பன்றிகள்
x

வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

வால்பாறையின் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

பெண்கள் அச்சம்

இந்த நிலையில் வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக எம்.ஜி.ஆர். நகர், வாழைத்தோட்டம், அண்ணாநகர், கக்கன்காலனி, சிறுவர்பூங்கா ஆகிய பகுதிகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளது.

இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். காட்டுப் பன்றிகள் சண்டையிட்டுக் கொண்டு சத்தமிட்டபடி ஓடுவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது.

சுகாதார சீர்கேடு

மேலும் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் சேக ரித்து வைத்த குப்பைகளை காட்டுப்பன்றிகள் கிளறி விட்டு செல் கின்றன. இதனால் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

அதோடு காட்டுப்பன்றிகள் ரோட்டில் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. கேரள மாநிலத்தில் பொது மக்க ளுக்கு இடையூறாகவும், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டு கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது போல் வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகளை சுட்டு கொல்ல வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story