விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள்


விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 20 Jun 2023 2:32 PM GMT (Updated: 21 Jun 2023 7:25 AM GMT)

செங்கம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம், கிளையூர், கல்லாத்தூர் உள்ளிட்ட கிராம பகுதியில் ஜவ்வாதுமலை அடிவார பகுதியில் உள்ளது. இங்குள்ள மலை அடிவாரங்களில் ஏராளமான விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிர் வைத்து பராமரித்து வருகின்றனர்.

குறிப்பாக வாழை, நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பநத்தம் பகுதியில் சுமார் 7 காட்டெருமைகள் ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, நெற்பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளையும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் காட்டெருமைகளை ஜவ்வாதுமலையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் விரட்டி விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story