தாளவாடி அருகே காட்டு யானை ;தாக்கி பெண் பலி; தோட்டத்தில் காவலுக்கு இருந்த போது பரிதாபம்


தாளவாடி அருகே காட்டு யானை ;தாக்கி பெண் பலி; தோட்டத்தில் காவலுக்கு இருந்த போது பரிதாபம்
x

தாளவாடி அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

யானைகள் அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

மேலும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் ெசய்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்காக தோட்டங்களிலேயே தங்கி விடுகிறார்கள்.

காவலுக்கு தங்கினர்

தாளவாடி அருகே உள்ள கேர்மாளத்தை சேர்ந்தவர் ஜடையப்பன் (வயது 62). விவசாயி. இவருடைய மனைவி மாதம்மாள் (55). கணவருக்கு உதவியாக விவசாயம் பார்த்து வந்தார்.

கணவன், மனைவி இருவரும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உருளை கிழங்கு சாகுபடி செய்திருந்தனர். காட்டு பன்றியோ, யானையோ தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி விடக்கூடாது என்பதால், இருவருமே நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் இருந்த குடிைசயில் காவலுக்காக தங்கியிருந்தனர்.

சாவு

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் பக்கத்து தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதனால் குடிசையில் இருந்து மாதம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டு யானை துதிக்கையால் மாதம்மாளை தூக்கி வீசி தாக்கியது. மேலும் காலால் மிதித்தது.

இதில் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது. சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்து பார்த்த ஜடையப்பன், மனைவி உயிரிழந்து கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.

சோகம்

இது குறித்து உடனே கேர்மாளம் வனத்துறைக்கும், ஆசனூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து மாதம்மாளின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிறகு மாதம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் போலீசாரும், வனத்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெண்ைண காட்டு யானை மிதித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story