பள்ளியின் சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு


பள்ளியின் சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட காட்டு யானை - நீலகிரியில் பரபரப்பு
x

கூடலூர் அருகே பள்ளியின் சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலையில் வசித்து வருகின்ற நிலையில் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு இருந்த சமையலறை கட்டிட சுவரை காட்டு யானை உடைத்து, அங்கு வைத்திருந்த உணவு பொருள்களை வெளியே எடுத்து சாப்பிட்டது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


Next Story