வால்பாறையில் காட்டு யானைகள் முகாம்


வால்பாறையில் காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 14 July 2023 4:15 AM IST (Updated: 14 July 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

காலநிலை மாற்றத்தின் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த காட்டு யானைகள் தற்போது மீண்டும் கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் அடிக்கடி வால்பாறை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பழைய வால்பாறை பகுதியையொட்டி சோலையாறு அணையின் நீர்நிலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டன. இந்த காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடும் என்று அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அட்டகாசம்

அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் நள்ளிரவு 2 மணியளவில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களுக்கும் சொந்தமான ஆனைமலை கிளப் வளாகத்திற்குள் புகுந்தன. பின்னர் கிளப்பின் கதவு, ஜன்னல்கள் முழுவதையும் உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானைகள் அறைகளில் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து அட்டகாசம் செய்தன.குறிப்பாக சமையலறையில் இருந்த குளிர்சாதன பெட்டிகள் சமையல் அறை பொருட்கள் அனைத்தையும் உடைத்து வெளியே தூக்கி வீசியெறிந்து சேதப்படுத்தியன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரவு நேர காவலாளிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த வால்பாறை வனச்சரக வனத்துறையின் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிளப்புக்குள் நின்றிருந்த காட்டு யானைகளை வெளியே விரட்டினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் வெளியே வந்த யானைகள் அருகில் உள்ள பாறைமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த சம்பவத்தால் தேயிலைதோட்ட தொழி லாளர்கள் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்து ள்ளனர்.


Next Story