தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்


தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 26 Aug 2023 10:30 PM GMT (Updated: 26 Aug 2023 10:30 PM GMT)

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே அத்திகுன்னா, அத்திமாநகர், சேலக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. அங்கு தென்னை, பாக்கு, வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகிறது. மேலும் உப்பட்டியில் இருந்து அத்திகுன்னா வழியா தேவாலா செல்லும் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை யானைகள் வழிமறித்து வருகின்றன. இந்தநிலையில் உப்பட்டியில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் உள்ள அத்திகுன்னா தேயிலை தோட்டத்திற்குள் 14 காட்டு யானைகள் புகுந்தன. அவை தொடர்ந்து தோட்டத்திற்குள் உலா வந்ததோடு, அணிவகுத்த படி சென்றன. அந்த நேரத்தில் அங்கு பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாலும், வாகனங்களை வழிமறித்து வருவதாலும் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story