பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2023 7:30 PM GMT (Updated: 31 Aug 2023 7:30 PM GMT)

பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சாலையோரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

சாலையோரத்தில் காட்டு யானைகள்

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 2, சேரங்கோடு சோதனை சாவடி ஆகிய பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு காட்டுனைகள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. பந்தலூரிலிருந்து சேரம்பாடி, சுல்தான்பத்தேரி, கோழிக்கோடு, கூடலூர் செல்லும் சாலையையும் வழிமறித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. நேற்று காலை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

நேற்று பகல் 1 மணிக்கு பந்தலூரிலிருந்து சேரம்பாடி செல்லும் சாலையில் உள்ள சேரங்கோடு சோதனைசாவடி அருகே சாலையோரமாக முகாமிட்டதோடு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது.

வனத்துறையினர் கண்காணிப்பு

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனகாப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து சென்று, சாலையில் உலா வந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

ஆனாலும் காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதேபோல் படச்சேரியில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்தது. மேலும், மகேந்திரன் என்பவரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து அட்டகாசம் செய்தது. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சேதமான பகுதிகளை பார்வையிட்டனர்.


Next Story