ஊருக்குள் புகுந்த காட்டு யானை


ஊருக்குள் புகுந்த காட்டு யானை
x

கொடைக்கானல் அருகே ஊருக்குள் காட்டு யானை புகுந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் பேத்துப்பாறைக்கு விரைந்து வந்து யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story