குட்டியுடன் காட்டு யானை உலா
சேரம்பாடி அருகே குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலியானார். அந்த யானை குட்டியுடன் அதே பகுதியில் தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதையடுத்து வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உப்பட்டி அருகே சேலக்குன்னாவில் 2 காட்டு யானைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story