காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.
பந்தலூர்
பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் பந்தலூர் அருகே அத்திகுன்னா கே.கே.நகருக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் வீட்டின் முன்பு நின்ற சுந்தரமூர்த்தி என்பவரது காரை காட்டு யானை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை விரட்டினர். இதையடுத்து தேவாலா செல்லும் சாலை அருகே முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் பின்புறம் உள்ள குடியிருப்பில் காட்டு யானை முகாமிட்டது. பின்னர் பலா மரத்தில் இருந்த பழங்களை தின்றது. பின்னர் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.