வால்பாறை அருகேஅரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்-தலைமை ஆசிரியர் அறை, சத்துணவு மையம் சேதம்


வால்பாறை அருகேஅரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்-தலைமை ஆசிரியர் அறை, சத்துணவு மையம் சேதம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் தலைமை ஆசிரியர் அறை, சத்துணவு மையம் சேதம் அடைந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் தலைமை ஆசிரியர் அறை, சத்துணவு மையம் சேதம் அடைந்தது.

அரசு பள்ளிக்குள் புகுந்தன

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வால்பாறையில் உள்ள கிராமப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எஸ்டேட் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் மற்றும் தேயிைல தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். இந்தநிலையில் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிட ஏதும் கிடைக்குமா என்று தேடியுள்ளது.

தந்தத்தால் குத்தியது

அங்கே ஒன்றும் கிடைக்காத நிலையில் ஜன்னலை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த பள்ளி சத்துணவு மையத்தின் ஜன்னல் மற்றும் கதவை உடைத்து அரிசிகளை சாப்பிட்டு விட்டு யானைகள் சென்றுள்ளன. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மாணவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கென்னடி வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் சம்பவயிடத்திற்கு வந்து பார்வையிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவு வழங்கவும் உடைந்த கதவு ஜன்னல்களை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். மேலும் வனத்துறையினர் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story