ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்


ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடுமலை எஸ்டேட்டில் ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதி தொழிலாளர் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

பின்னர் இந்த யானைகள் அஙகுள்ள ரேஷன் கடைகளை உடைத்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளன. மேலும் தொழிலாளர்களின் வீடுகளின் முன்பு நின்ற வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் சத்தம்போட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நடுமலை எஸ்டேட் பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story