வால்பாறையில் சாலையோரங்களில் காட்டு யானைகள் முகாம்-வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட கோரிக்கை


வால்பாறையில் சாலையோரங்களில் காட்டு யானைகள் முகாம்-வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சாலையோரங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. அதனால் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் சாலையோரங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. அதனால் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

காட்டு யானைகள் முகாம்

வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதில் ஒரு சில யானைக் கூட்டங்கள் சிறு சிறு கூட்டங்களாக பிரிந்து தேயிலை தோட்ட பகுதிகள், சாலைகள் மற்றும் சாலையோரத்தில் நடமாடி வருகிறது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணிகளை இயற்கை அழகுகளை கண்டுரசித்து வருகிறார்கள். சிறுகுன்றா எஸ்டேட் செல்லும் சாலை, வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட், உருளிக்கல் எஸ்டேட் ஆகிய இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

மேலும் காட்டு யானைகள் குட்டியுடன் சாலையை கடந்து செல்வதையும், சாலையோரத்தில் நிற்பதையும் பார்த்து மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அதனை தங்களின் செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதியில் சாலையோரத்தில் நடமாடி வருவதால் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் யானைகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story