கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள்


கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:15:46+05:30)

கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை பகுதியில் வெயில் வாட்டி வருவதால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு வருகின்றன. மேலும் கேரள மாநில எல்லையை ஒட்டி பன்னிமேடு, உருளிக்கல், ஹைபாரஸ்ட் நல்லமுடி, ஆனைமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் ஆனைமுடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் மாரியம்மன் கோவிலின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை சூறையாடியது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று எஸ்டேட் தொழிலாளர்கள் உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story