கேழ்வரகு பயிரை நாசம் செய்த காட்டு யானைகள்
பேரணாம்பட்டு அருகே கேழ்வரகு பயிரை காட்டு யானைகள் நாசம் செய்தன.
வேலூர்
பேரணாம்பட்டு வனசரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும், மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் 2 காட்டு யானைகளும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்து கோபிநாத் என்பவருடைய விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனையறிந்த விவசாயிகள் பட்டாசு வெடித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் அட்டகாசத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா கிராமநிர்வாக அலுவலர் தனசேகரன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story