அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்


அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை-மஞ்சூர் சாலையில் கெத்தை காட்டு யானைகள் அரசு பஸ்ஸை வழிமறித்து நின்றன இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் வழி விட்டு ஒதுங்கியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

கோவை-மஞ்சூர் சாலையில் கெத்தை காட்டு யானைகள் அரசு பஸ்ஸை வழிமறித்து நின்றன இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் வழி விட்டு ஒதுங்கியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

காட்டு யானைகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இது 43 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலை ஆகும்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்தப் பகுதியில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவை அவ்வப்போது அந்த வழியாக செல்லும் அரசு பஸ்சை நடு வழியில் சிறை பிடித்துக் கொள்கின்றன. மஞ்சூர், ஒக்க நாடு, கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி சோதனை சாவடி வரை உலா வருகிறது.

வழிவிட்டு ஒதுங்கின

கடந்த 2 வாரமாக இவற்றின் சேட்டை குறைந்து இருந்த நிலையில், நேற்று சாலையோரம் உள்ள மரக்கிளைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகள், சாலையோர மரக்கிளைகளை உடைத்து துவம்சம் செய்தன. இதேபோல் சாலை வளைவுகளில் உள்ள அறிவிப்பு பலகைகளை உடைத்தும் வளைத்தும் போட்டுள்ளன.

இந்த நிலையில் 2 குட்டிகளுடன் கூடிய ஐந்து காட்டு யானைகள் நேற்று மதியம் கோவையில் இருந்து மஞ்சுருக்கு சென்றபோது கெத்தை பகுதியில் காட்டு யானைகள் அரசு பஸ்ஸை வழிமறித்தன இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு முன்னர் அரசு பசை மூன்று மணி நேரம் வரை இந்த யானைகள் சிறை பிடித்து உள்ளது.

இதனால் இன்றும் அவ்வாறு ஆகுமோ என்று அவர்கள் அச்சத்தில் இருந்தபோது சற்று நேரத்தில் பஸ் செல்ல வழி விட்டு யானைகள் ஒதுங்கி நின்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்த மேலும் யானைகள் பஸ்சை வழி மறித்ததையும், பின்னர் ஒதுங்கி நின்றதையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.


Related Tags :
Next Story